More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் சென்னையில் இன்று ஆரம்பம்!
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் சென்னையில் இன்று ஆரம்பம்!
Feb 05
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் சென்னையில் இன்று ஆரம்பம்!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.



அந்தவகையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்றுஆரம்பமாகின்றது.



கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக ஓராண்டு கழித்து இந்தியாவில் நடக்கும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி இதுவாகும்.



இதனால் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி அரங்கேறும் இந்த டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.



மேலும் இத்  தொடரானது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்ற வகையிலும் முக்கியத்துவம் பெறுகிறது.



டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே நியூசிலாந்து தகுதி பெற்றுவிட்ட நிலையில் மற்றொரு அணி எது என்பது இத் தொடரின் மூலம் தெரிய வரும். டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்திய அணி குறைந்தது 2-0, 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றாக வேண்டும்.



இங்கிலாந்து அணி இறுதி சுற்றை எட்ட வேண்டும் என்றால் கண்டிப்பாக 3 டெஸ்டில் வெற்றி பெற்றாக வேண்டும். அதனால் இந்த தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.



போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:



இந்தியா:

ரோகித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி (தலைவர்), புஜாரா, ரஹானே, ரிஷப் பண்ட், அஸ்வின், அக் ஷர் பட்டேல் அல்லது வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா அல்லது முகமது சிராஜ்.



இங்கிலாந்து:

ரோரி பர்ன்ஸ், டாம் சிப்லி, ஜோ ரூட் (தலைவர்), ஆலி போப், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயீன் அலி, கிறிஸ்வோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன் அல்லது ஸ்டூவர்ட் பிராட்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun29

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் கோபன்ஹே

Feb23

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3

Aug23

அமெரிக்காவில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி நடைப

Mar20

ஐபிஎல் 15வது சீசன் தொடரின் முதல் லீக் போட்டியில் சென்னை

Jul11

ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதல் டி 20 போட்டி நே

Jul07

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி வி

Sep17

லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய

Mar22

ஐபிஎல் 2022ஆம் ஆண்டு தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்க

Oct18

ரியல் மெட்ரிட் முன்கள வீரர் கரீம் பென்சிமா தனது வாழ்க

Oct15

மகளிருக்கான ஆசியக் கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரின் இறுதி

Aug20

லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ட

Aug03

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியின் அரையிறுத

Jun25

இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி 20 மற

Aug31

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நேற்று தொடங்கியது. இதில

Jan26

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதிய