More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • பிரான்ஸில் குண்டு தாககுதலை மேற்கொள்ள திட்டமிட்டார் – ஈரான் இராஜதந்திரிக்கு 20 வருட சிறைத்தண்டனை
பிரான்ஸில் குண்டு தாககுதலை மேற்கொள்ள திட்டமிட்டார் – ஈரான் இராஜதந்திரிக்கு 20 வருட சிறைத்தண்டனை
Feb 05
பிரான்ஸில் குண்டு தாககுதலை மேற்கொள்ள திட்டமிட்டார் – ஈரான் இராஜதந்திரிக்கு 20 வருட சிறைத்தண்டனை

பிரான்ஸில் ஈரான் அரசாங்கத்திற்கு எதிரான குழுவொன்றின் பேரணியில் குண்டுதாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ்  இராஜதந்திரியொருவருக்கு பெல்ஜியம் நீதிமன்றம் 20வருடசிறைத்தண்டனையை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.



வியன்னாவில் உள்ள ஈரானிய தூதரகத்தில் பணியாற்றிய அசாதொல்ல அசாடி என்ற 49 வயது பெண் இராஜதந்திரிக்கே நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

2018இல் பிரான்ஸ் தலைநகரில் இடம்பெற்ற பேரணியிலேயே குண்டுதாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார் என அதிகாரிகள்  இராஜதந்திரிக்கு எதிராக குற்றச்சாட்டினை சுமத்தியுள்ளனர்.

இந்த பேரணியில் டிரம்பின் சட்டத்தரணியும் கலந்துகொண்டிருந்தார்.

ஈரானின் புலனாய்வு அமைச்சே இந்த சதிதிட்டத்தை தீட்டியது என தெரிவித்த பிரான்ஸ் அதிகாரிகள் ஈரானிய அதிகாரிகள் இருவரினது சொத்துக்களை பறிமுதல் செய்தது.

ஜேர்மன் பிரான்ஸ் பெல்ஜியம் ஆகியன இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையின் போது இவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

டெஹ்ரான் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது.

1979ம் ஆண்டு ஈரானிய புரட்சிக்கு பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் ஈரானிய அதிகாரியொருவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டமை இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar05

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் உரு

Oct11

பூமி கிரகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சுற்றுச்சூழல் ச

Mar07

உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் கடும் சேதங்களை விளைவித்து

Mar08

உக்ரைன் - ரஷ்யா போருக்கு மத்தியில் ஏமனில் உள்ள மக்களுக

Jan21

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைட

Mar07

உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கிய நாள் முதல் அங்கு வசித

Mar10

உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் தனது காதலிக்கு இ

May03

அமெரிக்கா-ஈரான் இடையே அணு ஆயுதவிவகாரத்தில் பிரச்சினை

Apr01

ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்ள ஒரு தங்க சுரங்கத்தில்

Feb24

எகிப்து நாட்டின் 3-வது மிகப்பெரிய நகரமான அலெக்சாண்டிர

Jun14