கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டக்களத்திற்கு த.வி.கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி சென்று கலந்துரையாடினார்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக குறித்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில், குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை சந்தித்த ஆனந்தசங்கரி, முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பிலும் எதிர்காலத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.