More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • கை, முக மாற்று சிகிச்சை; இளைஞருக்கு மறுவாழ்வு
கை, முக மாற்று சிகிச்சை; இளைஞருக்கு மறுவாழ்வு
Feb 06
கை, முக மாற்று சிகிச்சை; இளைஞருக்கு மறுவாழ்வு

கைகளுக்கும் முகத்திற்கும் இரட்டை மாற்று அறுவைச் சிகிச்சையை மேற்கொண்ட 22 வயது அமெரிக்க ஆடவர் மறுவாழ்வு பெற்றுள்ளார்.



டிமியோ என்ற அந்த ஆடவர் மேற்கொண்ட மாற்று அறுவைச் சிகிச்சை, உலகில் முதல்முறையாக வெற்றிகரமாக நடத்தப்பட்டது.



கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் அறுவை சிகிச்சையை மேற்கொண்ட அவர், முகத்திற்கும் கைகளுக்கும் தம்மை இன்னும் பழக்கப்படுத்திக்கொண்டு வருகிறார்.



2018ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் டிமியோ, வேலை முடிந்து வீட்டிற்குக் காரில் சென்றுகொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானார். விபத்தில் கார் வெடித்ததால் அவருடைய உடலின் 80 வீதம் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டிருந்தது.



டிமியோவின் முகம் உருத்தெரியாமல் போனது. அவர் தம்முடைய விரல்களையும் இழக்க நேரிட்டது.



20 அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்ட பின்னர், அவர் கடந்த மார்ச் மாதத்தில் ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ள எண்ணினார்.



ஓகஸ்ட் மாதத்தில் 140க்கும் மேற்பட்ட அறுவைச் சிகிச்சை மருத்துவர்கள் டிமியோவின் கைகளுக்கும் முகத்திற்கும் இரட்டை மாற்று அறுவைச் சிகிச்சையை நடத்தினர். அறுவைச் சிகிச்சை கிட்டத்தட்ட 24 மணிநேரம் நீடித்தது.



மறுவாழ்வு பெற்றுள்ள டிமியோவால் சூடு, குளிர் போன்ற உணர்வுகளை மீண்டும் கண்டறிய முடிகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May29

ஐரோப்பியர்கள் 400 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவை கண்ட

Mar06

போர் நிறுத்தத்தை மீறி ரஷ்யா தொடர்ந்தும் தாக்குதல் நடத

Apr03

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ந்தேதி போரை தொடங்க

Feb28

ரஷ்ய இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட கார்கிவ் பகுதியை உக

Mar07

அமெரிக்காவில் இதுவரை 8.7 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள்

Jul13

கரீபியன் தீவில் அமைந்துள்ள மிகவும் ஏழ்மையான நாடு ஹைதி

Jan27

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வேலையின்மை வீதம் நவம்பர் ம

Feb28

சீனா உக்ரைன் - ரஷ்ய போரை முன்மாதிரியாகக் கொண்டு தற்போத

Mar09

இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கல் பிரபல த

Jun10