More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வாவியில் வீழ்ந்து காணாமல் போனவர் சடலமாக மீட்பு
வாவியில் வீழ்ந்து காணாமல் போனவர் சடலமாக மீட்பு
Feb 06
வாவியில் வீழ்ந்து காணாமல் போனவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி முதலாம் குறிச்சி கடந்த வியாழக்கிழமையன்று (4) வாவியில் வீழ்ந்து காணாமல் போன இளைஞன் இன்று (06) முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்னர்.



மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் ஹிஸ்புல்லாஹ் வீதியைச் சேர்ந்த மீராமுகைதீன் முனாஸ் எனும் 20 வயது இளைஞரே இவ்வாறு வாவியில் விழுந்து காணாமல் போயிருந்தார்.



குறித்த இளைஞன் வாவியில் நிறுத்தப்பட்டிருந்த ஆழ்கடல் மீன்பிடி படகில் காணப்பட்ட வலையை ஒழுங்கு செய்வதற்காக சிறிய தோணி ஒன்றில் படகை நோக்கி சென்று கொண்டிருந்த போது தவறி வீழ்ந்து காணாமல் போயிருந்தார்.



குறித்த இளைஞனை தேடும் பணி இடம்பெற்று வந்த நிலையில் காத்தான்குடி முதலாம் மீனவர்கள் சிலர் இன்று சனிக்கிழமை காலை வாவியின் நடுப்பகுதியில் வைத்து இளைஞனின் சடலத்தை கண்டுள்ளனர்.



இதன் பின்னர் காத்தான்குடி பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் எம். இஸ்ஹாக் தலைமையில் பொலிசார் காத்தான்குடி முதலாம் குறிச்சி அல் அக்ஷா மீனவர் சங்க பிரதி நிதிகள் மற்றும் மீனவர்களுடன் படகில் சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.



இதையடுத்து சடலம் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டு பின்னர் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதுடன் இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb02

தமிழர்கள் தீர்வுக்காகவும் நீதிக்காகவும் ஜனநாயக வழிய

May26

புத்த பெருமானின் பிறப்பு, ஞானம்பெறுதல், பரிநிர்வாணமடை

Sep22

2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படைய

May09

பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து அலரி மா

Feb04

இடது கை மற்றும் மார்பில் காயங்களுடன் கூடிய ஆணின் சடலம

Jun02