கெப் வண்டியின் பின் பகுதியில் உள்ள ஆசனத்தில் அமர்ந்திருந்த 73 வயது நபர் ஒருவர் தம்புத்தேகம ராணி சந்தி சுற்று வட்டத்தில் ஆசனத்திலிருந்து தரையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தம்புத்தேகம பொலிசார் தெரிவித்தனர்.
தம்புத்தேகம கொத்மல்புர பகுதியைச் சேர்ந்த 73 வயது நபரே உயிரிழந்துள்ளவராவர்.
குறித்த முதியவர் தனது மகள், மகளின் கணவர் மற்றும் உறவினர்கள் பலருடன் பலழுவெவ பகுதியிலிருந்து அனுராதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் ராணி சந்தியில் அமைந்துள்ள சுற்று வட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கெப் வண்டியில் போதுமான ஆசன வசதி இல்லாததால் அந்த நபர் கெப் வண்டியின் பின் இருக்கையில் அமர்ந்து சென்ற போது சுற்று வட்டத்தில் இருக்ைகயிலிருந்து விழுந்து படு காயத்திற்கு உள்ளாகி தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.