More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: இரண்டாவது இன்னிங்ஸில் பங்களாதேஷ் தடுமாற்றம்!
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: இரண்டாவது இன்னிங்ஸில் பங்களாதேஷ் தடுமாற்றம்!
Feb 05
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதல் டெஸ்ட்: இரண்டாவது இன்னிங்ஸில் பங்களாதேஷ் தடுமாற்றம்!

பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.



இதன்படி இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 47 ஓட்டங்களை பெற்றுள்ளது.



இதற்கமைய தற்போது பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இரண்டாவது இன்னிங்ஸ் 219 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.



ஆட்டநேர முடிவில், முஷ்டபிகுர் ரஹீம் 10 ஓட்டங்களுடனும் மொமினுல் ஹக் 31 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.





சட்டோகிராம் மைதானத்தில் நேற்று முன் தினம் (புதன்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.



இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 430 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.



இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மெயிடி ஹசன் 103 ஓட்டங்களையும் சகிப் ஹல் ஹசன் 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.



மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், வோரிக்கன் 4 விக்கெட்டுகளையும் கோர்ன்வோல் 2 விக்கெட்டுகளையும் ரோச், கெப்ரியல் மற்றும் போனர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.



இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 259 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கிரைஜ் ப்ரெத்வெயிட் 76 ஓட்டங்களையும் பிளக்வுட் 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.



பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், மெயிடி ஹசன் 4 விக்கெட்டுகளையும் முஷ்டபிசுர் ரஷ்மான், தைஜூல் இஸ்லாம் மற்றும் நயீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep20

இந்தியா மற்றும் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிகளுக்கிட

Jul10

இங்கிலாந்து தொடரை முடித்து விட்டு தாயகம் திரும்பிய இல

Jan26

கொழும்பு: இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் தொடரில் இங்கில

Feb02

ரி-10 கிரிக்கெட் லீக் தொடரின், 14ஆவது லீக் போட்டியில், நோத

Sep07

கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன

Feb23

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3

Feb04

இலங்கை அணியின் வீரர் லஹிரு திரிமன்னேவிற்கும் அணியின்

Sep16

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந

Nov21

200 டெஸ்ட் போட்டிகளில் கடமையாற்றிய முதலாவது மத்தியஸ்தர

Mar09

கிரிக்கெட்டில் இனி மன்கட் ரன் அவுட் என்பதை அதிகாரப்பூ

Oct23

20 உலக கிண்ண போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன

Mar05

 இந்திய வீரர் விராட் கோலி தனது 100வது டெஸ்டில் எத்தனை ர

Oct16

ஐ.பி.எல். 2021 தொடரில் நான்காவது முறையாக சென்னை சூப்பர் கி

Oct02

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது டி20 போட்டி அசா

Feb12

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில்,