வைத்தியர் கயான் தந்த நாராயணனின் மரணத்தின் மூலம் கொரோனா தொற்றின் அபாயத்தை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இன்னும் துல்லியமாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) வலியுறுத்துகிறது.
கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்ட நிலையில் காலி- கராப்பிட்டிய போதன வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று காலை காலமான கயான் தந்த நாராயண வைத்தியரின் இரங்கல் தொடர்பான ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போது அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரி வித்துள்ளார்.