அவுஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத் தீயினால் 30 க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அவுஸ்திரேலியாவின் சுவான் ( Swan ) மற்றும் முன்டரிங் (Mundaring), சிட்டரிங்( Chittering), நோர்தாம்( Northam) ஆகிய பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தீ வேகமாக பரவி வருவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் தீயை அணைக்க 250 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இக் காட்டுத் தீயில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமானதுடன் சுமார் 7 000 ஹெக்டர் காட்டுப்பகுதி தீயில் எரிந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.