கிம்புலாஎல குணா என அழைக்கப்படும் இலங்கையை சேர்ந்த பாதளஉலகதலைவர் (சின்னையா குணசேகரன் ) சென்னை விமானநிலையத்தில் அவரது சகாக்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
புதுடில்லிக்கு செல்வதற்காக விமானத்தில் ஏறுவதற்கு சில நிமிடங்களிற்கு முன்னர் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கியு பிரிவினரின் தகவலை தொடர்ந்தே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ள பொலிஸார் அவர்கள் தொடர்ந்தும் போதைப்பொருள்வர்த்தகத்தில் ஈடுபட்டனரா என்பது குறித்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.