தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப் புள்ள களைக் குறைத்து 6 ஆம் வகுப்புக்கு மாணவர்களை சேர்க்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத் தைப் பரிசீலிக்கக் கல்வி அமைச்சகம் தீர்மானித்துள்ளது.
2020 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட் சையின் முடிவுகளின் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டில் 06 ஆம் வகுப்புக்கு மாணவர்களைச் சேர்க்கைகளின் எண் ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தைப் பரிசீலிக்கக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன் படி வெட்டுப் புள்ளிகளை ஒன்று அல்லது இரண்டு குறைத்து 6 ஆம் வகுப்புக்கு மாணவர்களின் எண் ணிக் கையை அதிகரிக்கக் கல்வி அமைச்சகம் தீர்மானிக்கவுள்ளது.
வெட்டுப் புள்ளிகள் குறித்துப் பெற்றோர் மற்றும் ஆசிரி யர்களின் கோரிக்கை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபிலா பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்துடன், மதிப்பெண்களைக் குறைக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டால், பாடசாலை வகுப்பறைகளின் எண் ணிக்கையை அதிகரிக்க வேண்டியிருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.