ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பதவிகளுக்காக அண்மையில் கட்சியின் முக்கியஸ்தர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கட்சியின் பிரதி செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.