2021-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பருவநிலை ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் (Greta-Thunberg), முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்(Donald Trump), ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி(Alexei-Navalny ) ஆகியோருடன் உலக பொது சுகாதார ஸ்தாபனம்(WHO) மற்றும் ‘BLACK LIVES MATTER’ ஆகியவற்றின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இப் பெயர்களைப் பரிசீலிக்கும் நோபல் குழுவினர் வரும் ஒக்டோபர் மாதம் வெற்றியாளரின் பெயரை அறிவிப்பர் எனவும் கூறப்படுகின்றது.
கடந்த வருடம் ஐ.நாவின் உலக உணவு திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.