இராணுவஅதிகாரத்தை கைப்பற்றுகின்றது என்ற செய்தியுடன் மியன்மார் திங்கட்கிழமை அதிகாலை கண்விழித்தது.
நாங்கள் இராணுவசதிப்புரட்சி குறித்த செய்தியொன்றை டுவிட் செய்யப்போகின்றோம் என ஊகிக்கின்றேன் என காலை ஏழு மணிக்கு முன்னர் ரொய்ட்டர் செய்தியாளர் அயே மின்ட் தான்ட் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டார்.
அனைத்தும் அமைதியாகயிருக்கின்றன,ஆனால் மக்கள் அச்சத்துடன் விழித்துள்ளனர்,எனது குடும்பத்தவர்கள் நண்பர்களிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தவண்ணமுள்ளது இணையம் அவ்வப்போது செயல் இழக்கின்றது எனது சிம்காட் செயல்இழந்துள்ளது என அவர் தெரிவித்தார்.
இதன் பின்னர் இராணுவத்திற்கு சொந்தமான தொலைக்காட்சி இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியது குறித்த அறிவிப்பை வெளியிட்டது.
இராணுவதளபதி நிர்வாகத்திற்கு பொறுப்பாக விளங்குவார் ஒரு வருட காலத்திற்கு அவசரகாலநிலை நீடிக்கும் என இராணுவம் தெரிவித்திருந்தது.