இந்தியாவில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந் நிலையில் விவசாயிகள் போராட்டத்தைத் தூண்டியதாக 250 கணக்குகளை மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் முடக்கிய டுவிட்டர் நிறுவனம், கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் மீண்டும் குறித்த டுவிட்டர் கணக்குகளை செயற்பட அனுமதித்துள்ளது.