தனியார் பஸ் ஊழியர்கள் இன்று காலை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தயாராகவுள்ளதாக தெரிய வந்து ள்ளது.
தனியார் பஸ் ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க தனியார் பஸ் சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று காலை பத்தரமுல்ல பகுதியில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.