உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் அமைச்சகம் தொடர்ச்சியான விசேட நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள தேசிய மரம் நடும் விழாவில் நாற்றுகள் நட தேவையான விதைகள் இன்று விதைக்கப்படும்.
இந்த நாட்டிலுள்ள சதுப்பு நிலங்களை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும் என்று சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டினார்.
அத்துடன், நாட்டின் தேசிய சதுப்பு நிலங்களை அழிக்க பங்களிக்கும் நபர்களுககு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.