கொவிட்-19 தொற்றுக்குள்ளான மூன்று மாதக் குழந்தை உட்பட 13 பேரை அம்பகமுவ சுகாதார அலுவலர் அடையாளம் கண்டுள்ளார்.
இதன்படி கினிகத்தேன பொலிஸ் பிரிவின் கெனில்வத்த பகுதியில் 5 பேரும் கெட்டவலாவிலுள்ள கோணவல பிரதேசத்தில் 3பேரும் கினிகத்தேனவின் ஹட்லா பகுதியில் ஒருவரும் ரஞ்ஜுராவ பிரதேசத்திலிருந்து 4 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டோர் வட்டவல பகுதியிலுள்ள ஒரு தனியார் ஆடைத் தொழிற்சாலையில் தொற்றுக்காளான தொழிலாளர்களின் தொடர்புள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பிசிஆர் சோதனைகள் மூலம் அவர்கள் பாதிக்கப்பட்டமை உறுதி யாகியுள்ளது. இதன்படி பாதிக்கப்பட்டோர் சிகிச்சைக்காகப் பரிந்து ரைக்கப்பட்டுள்ளனர்.