தெற்கு கடலில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளி மண்டல வியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் தென்கிழக்கு மற்றும் தெற்கு கடல் பிரதேசத்தில் நிலவும் பனி மூட்டம் காரணமாக மட்டக்களப்பு தொடக் கம் அம்பாந்தோட்டையூடாக காலி வரையான கடல் பிரதேசங்களில் இன்றைய தினமும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண் டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படும் காற்றின் வேகம் மணிக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரிக் கக்கூடுமெனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் கடற் படையினர் மற்றும் கடற்றொழிலாளர் களை முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.