சீன அரசானது நேற்றுமுன்தினம் கொரோனாத் தொற்றுக்கான 5 லட்சம் தடுப்பூசிகளை பாகிஸ்தானுக்கு நன்கொடையாக வழங்கியிருந்தது.
இந் நிலையில் பாகிஸ்தானில் நேற்றைய தினம் தடுப்பூசி செலுத்தப்படும் பணி ஆரம்பமானது. இதனை அந் நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் தொடங்கி வைத்தார்.
அந்தவகையில் முதலில் சுகாதாரத் பணியாளர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவின் சீனோபார்ம் தடுப்பூசி 79 % இருந்து 89 % வரை செயற்திறன்மிக்கது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 500 தடுப்பூசி மையங்கள் மூலம் ஒரு நாளைக்கு 40 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விரைவில் இது அதிகரிக்கப்படும் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.