More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • எதிரிப் படைகளைத் தோற்கடிப்பது போன்றே கொரோனாவையும் தோற்கடிப்போம் – பிரதமர்!
எதிரிப் படைகளைத் தோற்கடிப்பது போன்றே கொரோனாவையும் தோற்கடிப்போம் – பிரதமர்!
Feb 04
எதிரிப் படைகளைத் தோற்கடிப்பது போன்றே கொரோனாவையும் தோற்கடிப்போம் – பிரதமர்!

எதிரிப் படைகளைத் தோற்கடிப்பது போன்றே, கொரோனா – 19 தொற்றை தோற்கடிப்பதற்கும் இலங்கை தேசமாக எழுந்து நிற்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.



சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.



நாம் பெற்ற சுதந்திரத்தை அர்த்தமுள்ளதாக்கிக்கொள்ளும் செயல்முறையே இன்று தாய்நாட்டிற்கான தேவையாக உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.



நாடுகளிடையே ஒற்றுமையை வளர்த்தல் மற்றும் மத நல்லிணக்கம் என்பன இதற்கு வலுவான ஆதரவாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள பிரதமர், பல்வேறு சவால்களுக்கு மத்தியில் உள்ளூர் உற்பத்திக்கு மதிப்பளிக்கும் பொருளாதார கொள்கை ஊடாக அபிவிருத்தியை நோக்கி நகரும் பாதையில் நுழைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.



ஒவ்வொரு துறையிலும் முன்னெடுக்கப்பட வேண்டிய சீர்திருத்தங்களைப் புரிந்துகொண்டு, மக்களிடம் முன்வைக்கப்பட்ட சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் ஊடாக சுதந்திரம் மேலும் அர்த்தமுள்ளதாகும்போது வளமான எதிர்காலம் – சுபீட்சமான தாய்நாடு என்பது யதார்த்தமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.



எதிரிப் படைகளைத் தோற்கடிப்பது போன்றே, கொரோனா – 19 தொற்றை தோற்கடிப்பதற்கும் இலங்கை தேசமாக எழுந்து நிற்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது சுதந்திர தின செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.



தாய்நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த மற்றும் மகத்தான தியாகங்களைச் செய்த அனைவருக்கும் மற்றும் அந்த சவால்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்புடன் செயற்படும் அனைவருக்கும் மரியாதை செலுத்துவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb12

இலங்கையில் வாக

Aug19

என்ன நடந்தாலும் நாட்டை முடக்குவதில்லை என்ற கடுமையான ந

Feb01

ஒரு தடவை மற்றும் குறுகிய காலத்திற்கு பாவனைக்கு எடுத்த

Oct05

நாட்டில் முதலீடு செய்யும் 14 வேலைத்திட்டங்களுக்கு வரி

Apr08

கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் - காங்கேசன்து

Feb13

இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத

Jul04

கொவிட் பரவலையடுத்து வவுனியா நகரில் 8 கடைகள் சுகாதாரப்

Sep30

” TikTok ” மற்றும் 'ஒன்லைன் கேம்' ஆகியவற்றுக்கு அடிம

Sep22

உள்நாட்டு சந்தைகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை

Jul25

தபால் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிக்க புதிய திட்

Aug18

புதிய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இ

Mar12

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத

Feb08

கல்வி பொதுத் தராதர உயர் தரப்பரீட்சை, இன்றைய தினம் முதல

Oct15

நிதி மோசடிச் சம்பவத்தில் ஈடுபட்டு சிறையில் உள்ள சந்தே

May17

யாழ்ப்பாணம் - கொக்குவில் புகைரத நிலையத்திற்கு அருகில்