இலங்கையின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் சற்றுமுன்னர் கொழும்ப – 7 இல் அமைந்துள் சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பமாகியது.
‘சுபீட்சமான எதிர்காலம் – சௌபாக்கியமான தாய் நாடு’ என்ற தொனிப் பொருளில் இலங்கையின் 73ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் பிரதான நிகழ்வு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தற்போது நடைபெற்று வருகின்றன.
இலங்கையின் 73ஆவது சுதந்திர தினம் இன்று
இலங்கையின் 73ஆவது சுதந்திர தினம் நாடளாவிய ரீதியில் இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
சுதந்திர தினத்தின் பிரதான விழா இன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
சுதந்திர தின கொண்டாடத்தின் மரியாதை அணி வகுப்பில் 3,271 இராணுவத்தினர், 808 கடற்படையினர், 997 வான்படையினர், 664 பொலிஸ் துறையினர் கலந்துகொள்கின்றனர்.
இது தவிர பொலிஸ் விசேட அதிரடிப் படையின் 432 பேரும் சிவில் பாதுகாப்பு பிரிவின் 558 பேரும் சுதந்திர நிகழ்வில் கலந்துகொள்கின்றனர்.
அத்துடன் இதன்போது இடம்பெறவுள்ள கலாசார அணிவகுப்பில் 340 இசை மற்றும் நடன கலைஞர்கள் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முப்படையினர், பொலிஸ்துறையினர் உள்ளிட்ட 13 பிரிவினர் இந்த நிகழ்வுகளில் இணைகின்றனர்.
அத்துடன் 11 பாடசாலைகளைச் சேர்ந்த 45 மாணவர்களின் பங்குபற்றுதலுடன் தேசிய கீதம் இசைக்கப்படவுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக இம்முறை சுதந்திர தின கொண்டாட்டங்கள் சுகாதார விதிமுறைகளுக்கமைய கொண்டாடப்படுகின்றன. மேலும் சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்வது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் நிகழ்வில் கலந்துகொள்ளும் அனைவரும் சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளுக்கு அமைய செயற்படுவதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அத்தோடு இன்றைய நிகழ்வில் பங்குபற்றும் அனைவருக்கும் பி.சீ.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.