More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் நால்வர் உயிரிழப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் நால்வர் உயிரிழப்பு!
Feb 04
இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் நால்வர் உயிரிழப்பு!

இலங்கையில் மேலும் நான்கு கொரோனா மரணங்கள் பதிவாகின என அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.



அதன்படி வல்கம்முல்ல பகுதியைச் சேர்ந்த 89 வயதுடைய பெண் ஒருவர் நேற்று முன்தினம் தனது வீட்டிலேயே உயிரிழந்தார்.



கொவிட் 19 தொற்றால் ஏற்பட்ட நுரையீரல் தொற்று நிலைமையே அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



அதேநேரம், தேவாலப்பொல பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய பெண் ஒருவர் கடந்த முதலாம் திகதி தனது வீட்டிலேயே உயிரிழந்தார்.



கொவிட் 19 தொற்றால் ஏற்பட்ட நுரையீரல் தொற்று மற்றும் மோசமடைந்த நீரிழிவு நிலை அவரது மரணத்திற்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.



இதேவேளை, நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த 66 வயதுடைய ஆண் ஒருவர் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட் 19 தொற்று கண்டறியப்பட்டது.



அதன் பின்னர் அவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு நேற்று முன்தினம் உயிரிழந்தார்.



இரண்டாம் நிலை பக்றீரியா தொற்றால் குருதி விஷமானமை, சிறுநீரக நோய் நிலைமை அவரது மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



அத்துடன் யட்டியாந்தோட்டையை சேர்ந்த 70 வயதுடைய பெண் ஒருவர் ஹோமகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த முதலாம் திகதி உயிரிழந்தார்.



கொவிட் 19 நியுமோனியா, இதய நோய் மற்றும் நீரிழிவு என்பன அவரது மரணத்திற்கான காரணமாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.



இதனையடுத்து, இதுவரை நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 332 ஆக உயர்வடைந்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep20

நிகழ்நிலையில் நடைபெறவுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்

Jul26

வவுனியா ஓமந்தை பகுதியில் வவுனியா பிரதேச ஊடகவியலாளர்க

Jan28

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை அடுத்த மாதம் ந

Oct07

நேற்றைய தினத்தில் (06) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,

Mar28

இலங்கையில் முப்பது வருட கால யுத்தத்தின் போது விதிக்கப

Feb07

மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதத்தைத் திற

Feb11

இலங்கையில் தீவிரமடைந்துள்ள இராணுவத்தின் அழுத்தம் கா

Mar13

சந்தையில் குளிரூட்டப்பட்ட உணவுகளை கொள்வனவு செய்யும்

Feb02

ஒவ்வொரு கிராமத்தையும் உள்ளடக்கும் வகையில் பொதுமக்கள

Mar12

அனுராதபுரத்தில் அழகப்பெருமாகம பகுதியில், பிறந்த ஒன்ற

Oct15

களனி பட்டிவெல பிரதேசத்தின் ஊடாக பயணிக்கும் சாரதிகளுக

Mar22

மொரட்டுவை - கொரலவெல்ல பகுதியில் மின்னியலாளர் (electrician) ஒரு

Feb02

கலேவல-வீரகலவத்த பகுதியில் காதலித்த யுவதியை பார்க்கச்

Jan28

இலங்கையின் சிறைச்சாலைகளில் ஊழல் மற்றும் முறைகேடுகளை

Oct25

தெற்காசியாவைச் சேர்ந்த ஒருவர் பிரித்தானியாவை வழிநடத