More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • 2021ஆம் ஆண்டிற்குள் 75 மில்லியன் தடுப்பூசி அளவை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்க பயோஎன்டெக் திட்டம்!
2021ஆம் ஆண்டிற்குள் 75 மில்லியன் தடுப்பூசி அளவை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்க பயோஎன்டெக் திட்டம்!
Feb 02
2021ஆம் ஆண்டிற்குள் 75 மில்லியன் தடுப்பூசி அளவை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்க பயோஎன்டெக் திட்டம்!

2021ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பயோஎன்டெக் மேலும் 75 மில்லியன் வரை தடுப்பூசி அளவை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கும் என்று தலைமை நிதி அதிகாரி சியர்க் போய்ட்டிங் தெரிவித்துள்ளார்.



ஜேர்மனிய ஆய்வகத்தின் தலைவர் திங்களன்று அமெரிக்க நிறுவனமான ஃபைசருடன் இணைந்து உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசியை முகாமிற்கு விரைவுபடுத்துவதாக அறிவித்தார்.



இதுதொடர்பாக போய்ட்டிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தற்போதுள்ள ஒப்பந்தங்களின் கீழ், இரு கூட்டாளர்களும் பெப்ரவரி 15 வாரத்தின் தொடக்கத்தில் இருந்து விநியோகங்களை அதிகரிக்கவும் முதல் காலாண்டில் நாங்கள் செய்த அளவுகளின் எண்ணிக்கையை வழங்கவும் இரண்டாவது காலாண்டில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 75 மில்லியன் கூடுதல் டோஸ் வரை வழங்கவும் விரும்புகிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இரண்டாவது காலாண்டில் வழங்கப்படவுள்ள கூடுதல் 75 மில்லியன் தடுப்பூசிகள் 2021ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கப்பட்ட மொத்த ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் அளவுகளின் எண்ணிக்கையை 600 மில்லியனாகக் கொண்டுவரும் என்று ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லெய்ன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.



‘ஐரோப்பியர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக நாங்கள் மருந்து நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்’ என அவர் மேலும் பதிவிட்டுள்ளார்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep08

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி உள்ள நி

Apr12

சூயஸ் கால்வாயில் தரை தட்டி நின்ற, ‘எவர் கிவன்’ கப்ப

May08

உலக வர்த்தக அமைப்பின் அறிவுசார் சொத்துரிமை விதிகளில்

Mar06

இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட், ( Naftali Bennett ) ரஸ்ய ஜனாதிபதி

Mar27

மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற

Mar26

அமெரிக்காவின் பைசர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அ

Jul24

அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரசின் 3-வது அலை பெரும

Feb24

கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி அமெரிக்கா ஓராண்டுக்

May20

ஆப்கானிஸ்தானில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் தொலைக்கா

Jun14

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்க

Sep19

தாய்வானின் தென்கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 6.9 ரிக்டர்

Mar26

அமெரிக்காவில் சமூக ஊடகங்களால் சிறுவர்களுக்கு ஏற்படு

Jan19

கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஓராண்டை கடந்துவிட்ட போதிலும்

May23

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிறுமி ஒருவரை சிறுவன் ஒருவன்

Mar13

உக்ரைன் நாட்டின் மீதான ரஷியாவின் போர் நேற்று 17-வது நாள