More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • தடுப்பூசி தயாரிப்பு இந்தியாவின் சுய பெருமையின் அடையாளம்- மோடி பெருமிதம்!
தடுப்பூசி தயாரிப்பு இந்தியாவின் சுய பெருமையின் அடையாளம்- மோடி பெருமிதம்!
Feb 01
தடுப்பூசி தயாரிப்பு இந்தியாவின் சுய பெருமையின் அடையாளம்- மோடி பெருமிதம்!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியானது, சுயசார்பு இந்தியாவின் சின்னம் மட்டுமல்லாது அதன் சுய பெருமையின் அடையாளம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.



பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் என்ற வானொலி நிகழ்ச்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



இதன்போது அவர் குறிப்பிடுகையில், “இந்தச் சங்கடம் நிறைந்த வேளையில், இந்தியாவால் எப்படி உலகிற்கு சேவையாற்ற முடிகிறது என்றால், நம் நாடு இன்று மருந்துகள் மற்றும் தடுப்பூசி தயாரிப்பில் வல்லமை பெற்றிருக்கிறது என்பதுடன் சுயசார்பு அடைந்திருக்கிறது என்பதால்தான்.



பல்வேறு நாடுகளின் குடியரசுத் தலைவர்களும் பிரதமர்களும் இந்தியா குறித்து வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வருகின்றனர்.



இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியானது, சுயசார்பு இந்தியாவின் சின்னம் மட்டுமல்லாது, அதன் சுய பெருமையின் அடையாளமாகும்.



நாம் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை மேற்கொள்வது மட்டுமல்லாமல், நமது குடிமக்களுக்கு தடுப்பூசி போடுவதில் மிக வேகமாக இருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul07

மேற்கு வங்காள சட்டசபையில் கடந்த 2-ந் தேதி கவர்னர் ஜெகதீ

Jan15

 இந்தியாவின் ஜார்க்கண்ட மாநிலத்தில் ஐந்தாண்டுகளுக்

Mar25

வேலை நிறுத்தம் மற்றும் விடுமுறைகள் காரணமாக கடந்த வாரத

May04

அமராவதி: ஆந்திராவில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி

Jun08

திருச்சி ஈழத்தமிழர் சிறப்பு முகாமில் இருபது நாட்களாக

Oct02

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாள் விழா இன

Aug12