பிரித்தானியாவை பனிப்புயலொன்று தாக்கும் அபாயம் இருப்பதாக அந் நாட்டு வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், மழையும் பனியுமாக நாட்டில் பெரும் இடையூறை ஏற்படுத்தப்போவதாகவும்,ஸ்காட்லாந்தில் -15 பாகை மற்றும் பிரித்தானியாவில் -6 பாகை செல்ஷியஸாக வெப்பநிலை இறங்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளுக்கு பனி எச்சரிக்கை விடுத்துள்ள குறித்த மையம் தாழ்வான பகுதிகளில் 5 சென்டி மீற்றர் அளவுக்கும், உயரமான பகுதிகளில் 40 சென்டி மீற்றர் அளவுக்கும் பனிப்பொழிவு இருக்கும் எனவும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.