டெல்லியில் இஸ்ரேலிய தூதரகம் அருகே தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைப்பேசியில் அழைத்து உரையாடிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, “இஸ்ரேல் தூதரகத்துக்கும், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதில், இந்தியா அதிகம் முக்கியத்துவம் அளித்து வருகிறது.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதன்பின் இரு தலைவர்களும், கொரோனா நிலைமை பற்றி விவாதித்தனர். தொற்று பரவலை தடுக்க இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது பற்றியும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில், மேற்காசிய நாடான இஸ்ரேலின் தூதரகம் அருகே கடந்த 29ம் திகதி குண்டு வெடித்தது. இது பயங்கரவாத தாக்குதல் என இஸ்ரேலிய தூதரகம் உறுதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.