கொழும்புதுறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் 100 வீதம் இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் செயற்படுவதை உறுதி செய்வதற்காக அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தொழிற்சங்கங்களிடம் உறுதியளித்துள்ளார்.
கிழக்கு கொள்கலன் முனையம் குறித்த கரிசனைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைகளை கிழக்கு கொள்கலன் முனையத்தை நிர்வாகம் செய்யவிருந்த வெளிநாட்டு நிறுவனம் நிராகரித்துவிட்டது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக கிழக்கு கொள்கலன் முனையம் இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் செயற்படுவதை உறுதி செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.