வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜெயவர்தனவுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடகச் செயலா ளர் தெரிவித்தார்.
இதன்படி இன்று காலை முதல் தற்காலிகமாக அமைச்சு மூடப்பட்டு அமைச்சின் கட்டிட வளாகம் கிருமித் தொற்று நீக்கம் செய்யப்பட்டு வருகின்றது. இச்செயற்பாடு நிறைவுற்றதும் அமைச்சு மீள இயங்கத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பிசிஆர் சோதனையில் அமைச்சர் பந்துல குணவர்த னவுக்கு தொற்றில்லை என உறுதியானதால் அவர் தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார் என அமைச்சின் ஊடகச் செயலாளர் தெரிவித்தார்.