பலாங்கொடை வளவ ஆற்றில் மூழ்கி இறந்த மாணவி தொடர்பில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட ஆசிரியை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியை பலாங்கொட நீதிவான் ஜெயருவன் திசாநாயக்க முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை ரூபா 1 லட்சம் பெறுமதியான இரு பிணைகளில் விடுவிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
சந்தேக நபரான ஆசிரியை கடந்த சனிக்கிழமை(30) 15 மாணவர்களை அழைத்துக்கொண்டு வளவ ஆற்றுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இதன்போது 16 வயது மாணவி காணாமல் போயுள்ளார்.
மாயமான மாணவியின் உடல் இரு மணித்தியாலங்களின் பின் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகள் மேற்கொண்ட போது ஆசிரியை பாடசாலை அதிபருக்கோ வலயக் கல்விப் பணிப்பாளருக்கோ சுற்றுலா குறித்து அறிவிக்கவில்லை என்பது தெரியவந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.