இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ரா செனிகா கொரோனா தடுப்பூசி செலுத்திய எவருக்கும் இதுவரை எந்தவொரு கடுமை யான பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம்வரை 59 ஆயிரத்து 154 பேருக்கு கொ ரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாகச் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
நேற்றைய தினம் மாத்திரம் 21 ஆயிரத்து 329 பேருக்கு கொ ரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரி வித்தார்.
பக்கவிளைவுகளை ஏற்படுத்துமா என சந்தேகிக்கும் எவ ருக்கும் தடுப்பூசி செலுத்தப்படாது என்று இன்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.