More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • உடபுஸ்ஸலாவில் திடீர் தீ விபத்து- பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜீவன் முன்னெடுத்த உடனடி நடவடிக்கை!
உடபுஸ்ஸலாவில் திடீர் தீ விபத்து- பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜீவன் முன்னெடுத்த உடனடி நடவடிக்கை!
Jan 27
உடபுஸ்ஸலாவில் திடீர் தீ விபத்து- பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜீவன் முன்னெடுத்த உடனடி நடவடிக்கை!

நுவரெலியா- உடபுஸ்ஸலாவ,டெல்மார் கீழ் பிரிவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீடு  முழுமையாக  எரிந்து நாசமாகியுள்ளது.



குறித்த வீட்டில் இருந்த 5 பேர் தற்காலிகமாக தோட்ட கழக மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.



மேலும் தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் மின் கசிவின் காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.



குறித்த விபத்து சம்பவித்தப்போது, வீட்டிலிருந்தவர்கள் எரிவதை கண்டு கூச்சலிட்டதாகவும் அதன் பிறகு அயலவர்கள் ஓடி வந்து ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.



இந்த தீ விபத்தில் பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், உடுதுணிகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.



இதேவேளை தீ இடம்பெற்ற தோட்டத்திற்கு உடனடியாக விஜயம் செய்த இலங்கை தொழிலாளர், காங்கிரஸின் பொது செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் சம்பவத்தை நேரில் பார்வையிட்டதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.



மேலும் குறித்த விபத்து தொடர்பாக உடபுஸ்ஸலாவ பொலிஸ் நிலையத்திற்கு பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணகளை மேற்கொண்டனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar30

சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடுகளுக்குச் செல்லும் இல

Jan21

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இராணுவப் பயிற்சி அளி

Oct06

கடந்த 10 தினங்களாக கடலுக்கு சென்ற மீனவர்கள் இதுவரை கரைக

May01

வடமராட்சி கடற்பரப்பில் வைத்து கடற்தொழிலாளர் சங்கத் த

Mar01

இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதிக்க

Mar08

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த பெப்ரவர

May27

  நாட்டில் எரிபொருளை பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்ப

Apr02

இலங்கை மக்களிற்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உ

Sep24

கோழிப்பண்ணைக்கு தேவையான கோழிகளின் இறக்குமதி குறைவடை

Oct05

முல்லைத்தீவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கட

Oct10

ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சட்டமூலம் தற்போது சட்டமா அதிபர

Sep21

ஒன்றாய் எழுவோம்' எனும் தொனிப்பொருளில் 75ஆவது சுதந்திர

Jan26

இலங்கை 5 இலட்சம் அஸ்ட்ராஜெனெகா கொவிட்-19 தடுப்பூசிகளை இ

Feb16

சிறிலங்கா இராணுவத்தை சேர்ந்த அனைவருக்கும் மற்றும் ஓய

Feb02

நாட்டில் கடந்த இரண்டு தினங்களில் இடம்பெற்றுள்ள வீதி வ