நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் 4 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அங்குனுகொலபெலஸ்ஸ சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிறைதண்டைன விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை சிறைச்சாலைக்கு அனுப்புவதற்கு முன்பு பல்லன்சேன தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில் தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்துள்ளதை அடுத்து அவர் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.