அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற மீண்டும் அனுமதியளிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.
2016ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமா, மூன்றாம் பாலினத்தவர்கள் இராணுவத்தில் சேர வழிவகை செய்தார்.
ஒபாமாவின் இந்த உத்தரவை பின்னர் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் நீக்கினார்.
தற்போது மீண்டும் ட்ரம்ப் விதித்த தடையை நீக்கி, அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.
இதன்படி, அமெரிக்க ராணுவத்தில் ஏற்கனவே பணிபுரியும் மூன்றாம் பாலினத்தவர்கள் தொடர்ந்து பணி புரியலாம் ஆனால் இராணுவத்தில் புதிதாக மூன்றாம் பாலினத்தவர்கள் சேர்வதற்கு தடைவிதிக்கப்பட்டது.
இதுதொடர்பாக ஜோ பைடன் கூறுகையில், ‘அமெரிக்க இராணுவத்தில் சேவை செய்யத் தகுதியுள்ள அனைவரும் இராணுவத்தில் சேரலாம்.
தகுதியுள்ள அனைவரும் வெளிப்படையாகவும் பெருமையுடனும் சேவை செய்யும்போது அமெரிக்கா பாதுகாப்பாக இருக்கும், அதனால் மூன்றாம் பாலினத்தவர்கள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது’ என கூறினார்.