நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய களுத்துறை மாவட்டம்– பண்டாரகமை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 9 கிராம சேவகர் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளது.
அதேபோன்று இரத்தினபுரி மாவட்டம்– எஹெலியகொட பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மொரகல கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளது.
இந்த பகுதிகள் அனைத்தும் நாளை (வியாழக்கிழமை) காலை 5 மணி முதல் குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.