சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் பெங்களூருவில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையே 4 ஆண்டுகள் சிறை தண்டனை நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார். ஆனாலும் அவர் தொடர்ந்து அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் இன்று விக்டோரியா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
* அறிகுறி இல்லாத கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் சசிகலா உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது.
* சசிகலா 4வது நாளாக ஆக்சிஜன் சிலிண்டர் உதவியின்றி இயற்கையாக சுவாசித்து வருகிறார்.
* சசிகலாவின் உடலில் சர்க்கரை அளவு உள்ளிட்டவை இயல்பான அளவிலேயே உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.