More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • எச்-4 விசா மூலம் அமெரிக்காவுக்குச் செல்பவர்கள் அங்கு பணியாற்ற அனுமதி
எச்-4 விசா மூலம் அமெரிக்காவுக்குச் செல்பவர்கள் அங்கு பணியாற்ற அனுமதி
Jan 28
எச்-4 விசா மூலம் அமெரிக்காவுக்குச் செல்பவர்கள் அங்கு பணியாற்ற அனுமதி

அமெரிக்காவுக்கு எச்-4 விசா மூலம் செல்பவர்கள், அங்கு பணியாற்றுவதற்கு அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் அனுமதி அளித்துள்ளார்.



அமெரிக்காவிற்கு எச்-1பி விசாவில் சென்று பணியாற்றும் வெளிநாட்டினரின் மனைவி அல்லது கணவர் ஆகியோருக்கு எச்-4 விசாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.



கடந்த 2015ஆம் ஆண்டு வரை எச்-4 விசாவில் செல்பவர்கள், அமெரிக்காவில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டிருந்தது.



இந்தத் தடை முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் நீக்கப்பட்டது.



இருப்பினும் அதன் பின்னர் டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இந்த தடை மீண்டும் அமுல்படுத்தப்பட்டது.



இந்நிலையிலேயே இந்தத் தடையை நீக்கி புதிய ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.



இதனால், அமெரிக்க வாழ் வெளிநாட்டவர்களின் குடும்பத்தினர், இனி எச்-4 விசா மூலம் வேலைக்குச் செல்ல முடியும்.



பைடனின் அறிவிப்புக்கு சமூக வலை தளங்களில் அமெரிக்கவாழ் வெளிநாட்டவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar25

உக்ரைனுடனான போரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இர

Aug06

இங்கிலாந்து, இந்தியா இடையேயான பயண கட்டுப்பாட்டு விதிம

Jan01

தொலைபேசி உரையாடலின் போது ரஷிய அதிபர் புதினை, அமெரிக்க

Oct05

உக்ரைனிய படைகள் கெர்சனின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு

Feb21

பிரான்ஸில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொது சேவைகளுக்கான

Jan22

கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால

Oct10

அமெரிக்காவின் இண்டியானாபொலிஸ் நகரில் இருந்து நியூயா

May28

குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் செல்

Sep16

வெஸ்ட்மின்ஸ்டர் அறைக்குள் வைக்கப்பட்டுள்ள இரண்டாம்

Jun10