More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • போரதீவுப்பற்றில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொது இடங்கள் தூய்மைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு
போரதீவுப்பற்றில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொது இடங்கள் தூய்மைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு
Jan 28
போரதீவுப்பற்றில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொது இடங்கள் தூய்மைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பொது இடங்களை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளை போரதீவுப்பற்று பிரதேசசபை முன்னெடுத்து வருகின்றது.



மேலும் டெங்கு நோயின் தாக்கமும் நுளம்புகளின் பெருக்கமும் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்களின் நன்மை கருதி இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



அந்தவகையில்  போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த வதனமார் பூஜை செய்யும் ஆலயமாக கருதப்படும் கல்லடிப் பிள்ளையார் ஆலயத்தில்  நேற்று (புதன்கிழமை) சிரமதான நடவடிக்கைகள் மூலம் துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.



வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டு ஆத்துவாளைகளும் புற்களும் முட்களும் பரந்து காணப்படுகின்ற காரணத்தினால் போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனியின் தலைமையில் பிரதேசசபை செயலாளர் பா. சதீஸ்கரனின் வழி நடத்தலின் கீழ் இந்த சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.



இந்த சிரமதானத்தில் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், வெல்லாவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி,கல்லடிப் பிள்ளையார் ஆலய நிர்வாக சபையினர் பங்குகொண்டிருந்தனர்.



இன்று இவ்வாலயத்தில், தைப்பூசம் தினத்தை முன்னிட்டு ஆலயத்தில் வதனமார்களால் மிகவும் சிறப்பான முறையில் பூசை வழிபாடுகள் நடைபெறவுள்ளன.



வயலில் வேளாண்மை வெட்டி முதல் புதூர் பொங்கள் வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. கால்நடைகள் வளர்க்கும் பண்ணையாளர்கள் முதல் பால் கறந்து பொங்கள் வழிபாடுகள் செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul22

கோரிக்கைகளை முன்வைத்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவர

Jun30

தமிழர்கள் நாட்டை பிரிக்க முனைவதாக பிடித்து சிறையில் அ

May11

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, அவரது குடும்பத்தினர்

Mar04

இரணைதீவில் பொது மக்கள் வசிக்காத பகுதியில் மாத்திரமே க

Jan25

2021 வரவு செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்க

Aug27

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கு

Sep21

குழந்தைகளின் போசாக்கின்மை தொடர்பாக யுனிசெஃப் முன்னர

Jun24

அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் அமைச்சர் நாமலின் கரு

Jan19

நாட்டில் ஒட்சிசன் தேவையுடைய கொரோனா தொற்றாளர்கள் எண்ண

Mar06

வீரகெட்டிய, அத்தனயால பிரதேசத்தில் வசிப்பவர்கள் பொலிஸ

Feb10

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகள் ரயில

Oct03

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொட

Feb01

தமிழக மீனவர்களால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்

Sep20

நோர்வூட் தொடக்கம் பொகவந்தலாவ வரையிலான பிரதான வீதியில

Mar13

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர் போரா