ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி அபு தாபியில் நேற்றைய தினம் நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 266 ஓட்டங்களை எடுத்தது.
அந்த அணியின் தலைவர் அஷ்கர் ஆஃப்கன் 41ஓட்டங்களையும், ரஷித் கான் 48 ஓட்டங்களையும் குவித்தனர்.
பின்னர் 267 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் பால் ஸ்டிர்லிங் சிறப்பாக விளையாடி 118 ஓட்டங்களைக் விளாசினார்.
என்றாலும் ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க அயர்லாந்து 47.1 ஓவரில் 230 ஓட்டங்களை எடுத்து சகல விக்கெட்டுக்களும் இழந்தது.