More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கை உட்பட சில நாடுகளின் பொலிஸ் படைகளுக்கான சர்வதேச பயிற்சிகளை நிறுத்தக் கோரிக்கை!
இலங்கை உட்பட சில நாடுகளின் பொலிஸ் படைகளுக்கான சர்வதேச பயிற்சிகளை நிறுத்தக் கோரிக்கை!
Jan 25
இலங்கை உட்பட சில நாடுகளின் பொலிஸ் படைகளுக்கான சர்வதேச பயிற்சிகளை நிறுத்தக் கோரிக்கை!

இலங்கை உட்பட அடக்குமுறையில் ஈடுபடும் படைகளுக்கான பொலிஸ் பயிற்சித் திட்டங்களை நிறுத்துமாறு இங்கிலாந்து அரசுக்கு ஆயுத வர்த்தகத்திற்கு எதிரான பிரசாரம் என்ற அமைப்பு (Campaign Against Arms Trade) அழைப்பு விடுத்துள்ளது.



அத்துடன், பொலிஸ் கல்லூரி வழங்கும் அனைத்து சர்வதேசப் பயிற்சிகளையும் மதிப்பாய்வு செய்யுமாறும் கோரப்பட்டுள்ளது.



2012இல் கல்லூரி நிறுவப்பட்டதிலிருந்து, குறைந்தபட்சம் 76 நாடுகளுக்கு பயிற்சி மற்றும் உதவிகளை வழங்கியுள்ளதாக ஆயுத வர்த்தகத்திற்கு எதிரான பிரசாரம் அமைப்பு தெரிவித்துள்ளது.



அத்துடன், வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் அலுவலகத்தால் (Foreign & Commonwealth Office) மனித உரிமைகள் கவனிக்கப்படும் நாடுகளாகப் பட்டியலிடப்பட்ட 12 நாடுகளுக்கும் இவ்வாறு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.



ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், சீனா, கொலம்பியா, எகிப்து, லிபியா, பாகிஸ்தான், ருவண்டா, சவுதி அரேபியா, சோமாலியா, இலங்கை மற்றும் சூடான் ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதனைவிட, சித்திரவதைக் குற்றச்சாட்டுக்கு உள்ளான பொலிஸ் படைகளைக் கொண்ட பல நாடுகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. இவை, வெளியுறவு மற்றும் கொமன்வெல்த் அலுவலகத்தின் பட்டியலில் இல்லை. ஆனால், இவற்றில் இங்கிலாந்து ஆயுதங்களை வாங்கும் நாடுகளும் உள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



இந்நிலையில், ஆயுத வர்த்தகத்திற்கு எதிரான பிரசாரத்தின் செய்தித் தொடர்பாளர் அன்ட்ரூ ஸ்மித் (Andrew Smith of Campaign Against Arms Trade) தெரிவிக்கையில்,



“இந்தப் பொலிஸ் படைகளில் பல சித்திரவதை மற்றும் பிற முறைகேடுகள் பற்றி குற்றம் சாட்டப்பட்டுள்ளன. அத்துடன், மிருகத் தனமான மற்றும் அடக்குமுறைச் சட்டங்களை நிலைநிறுத்த அவர்கள் தங்கள் சக்தியைப் பயன்படுத்துகிறார்கள். இங்கிலாந்து அவர்களுடன் ஒத்துழைக்கவோ அல்லது அவர்களின் சர்வாதிகார ஆட்சியை வலுப்படுத்தவோ கூடாது.



அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ஃப்ளொய்ட்டின் கொலை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட அடக்குமுறைகள் மாநில வன்முறைக்கு வழிவகுத்ததுடன் சர்வதேச கவனத்தை ஈர்த்தன. ஆனால், இது அமெரிக்காவில் மட்டுமுள்ள பிரச்சினையல்ல. இது உலகம் முழுவதும் நடக்கிறது. பாசாங்குத்தனத்திற்கு ஒரு முடிவு இருக்க வேண்டும்.



இந்நிலையில், எந்த பொலிஸ் படைகளுக்கு இங்கிலாந்து பயிற்சியளித்தது என்பதையும், மனித உரிமை மீறல்களில் அந்தப் படைகள் ஈடுபட்டுள்ளனவா என்பது குறித்தும் ஒரு முழு மதிப்பாய்வு இருக்க வேண்டும்.



இலங்கையில் மனித உரிமைகள் குறித்து கவலைகளை எழுப்பிய போதிலும், இங்கிலாந்து தனது ஆயுத ஒப்பந்தங்களையும் தீவுடனான இராணுவப் பயிற்சி நடவடிக்கைகளையும் தொடர்ந்து பராமரித்து வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr30

கருத்து தெரிவித்துக்கொண்டிருக்காமல், விவசாயிகளுக்கு

Mar09

வவுனியா - குட்செட் வீதியில் நேற்று முன்தினம் சடலமாக மீ

Feb07

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு ஒர

May16

நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத் தடை நாளை (17) அதிகாலை ந

Mar23

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளில் 2022ஆ

Jan26

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செலே

Sep25

திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்

Mar23