சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப் பட்ட 1, 341கிலோ கிராம் மஞ்சள் தொகையுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிலாவத்துறை கடற்படையினரால் வழங்கப்பட்ட தக வலின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பு மேற் கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த சம்பவத்தில் 19 வயதான சிலாவத் துறை பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப் பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த சந்தேக நபர் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளமை தெரியவந் துள்ளது.