More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • தாய்லாந்து ஓபன் பட்மிண்டன் : கரோலினா, ஆக்சல்சென் மீண்டும் சம்பியன்!
தாய்லாந்து ஓபன் பட்மிண்டன் : கரோலினா, ஆக்சல்சென் மீண்டும் சம்பியன்!
Jan 25
தாய்லாந்து ஓபன் பட்மிண்டன் : கரோலினா, ஆக்சல்சென் மீண்டும் சம்பியன்!

டோயோட்டா தாய்லாந்து ஓபன் (Thailand Open) சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் கரோலினா(Carolina Marin) , விக்டர் ஆக்சல்சென்( Viktor axelsen ) மீண்டும் சம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளனர்.



டோயோட்டா தாய்லாந்து ஓபன் சர்வதேச பட்மிண்டன் போட்டி பாங்கொக் நகரில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது.



அந்தவகையில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதிப்  போட்டியில் ஒலிம்பிக் சம்பியனான கரோலினா மரின்(ஸ்பெயின்) 21-19, 21-17 என்ற நேர் செட் கணக்கில் ‘முன்னணி’ வீராங்கனை தாய் ஜூ யிங்கை (சீனதைபே) தோற்கடித்து பட்டத்தை தட்டிச் சென்றார்.



கடந்த வாரம் நடந்த யோனெக்ஸ் தாய்லாந்து ஓபனிலும் இதே தாய் ஜூ யிங்கை வீழ்த்தி தான் கரோலினா மகுடம் சூடியது நினைவு கூரத்தக்கது.



இரண்டு வாரங்களில் 2 சம்பியன் பட்டம் வென்று இந்த ஆண்டை வியப்புக்குரிய வகையில் தொடங்கி இருக்கிறேன்’ என்று கரோலினா குறிப்பிட்டார்.



ஆண்கள் ஒற்றையர் பிரிவில் விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) 21-11, 21-7 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் ஹான்ஸ் கிறிஸ்டியன் சோல்பெர்க்கை பந்தாடி மீண்டும் பட்டத்தை சொந்தமாக்கினார். அடுத்ததாக உலக டூர் இறுதி சுற்று போட்டி இதே பாங்கொக்கில் நாளை மறுதினம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar05

 இந்திய வீரர் விராட் கோலி தனது 100வது டெஸ்டில் எத்தனை ர

Mar26

12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தி

Sep07

இந்தியா, இங்கிலாந்து அணியிலான 4வது டெஸ்ட் போட்டி லண்டன

Mar29

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள்

Mar23

ஐபிஎல் 15வது தொடரின் சீசன் மார்ச் 26ம் தேதி தொடங்க உள்ள ந

Feb05

இலங்கையின் மிகவும் பழைமைவாய்ந்த கிரிக்கெட் கழகங்களி

Dec27

டெஸ்ட் கிரிக்கெட்டின் 145 ஆண்டுகால வரலாற்றில் ஒரு வித்த

Feb05

பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடை

Feb21

இயக்குனர் விக்னேஷ் சிவன் , எம்எஸ் தோனியை வைத்து ஒரு வீட

Mar20

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மொயின் அலிக்கு 20 நாட்க

Jul15

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும்

Feb14

தமிழக வீரர் விஜய் ஷங்கரை குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்தி

Mar06

மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று

Mar06

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அ

Oct15

மகளிருக்கான ஆசியக் கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரின், சம்ப