More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • சுகிர்தராஜனின் நினைவேந்தல் நேற்று கிழக்கில் அனுஷ்டிப்பு
சுகிர்தராஜனின் நினைவேந்தல் நேற்று கிழக்கில் அனுஷ்டிப்பு
Jan 25
சுகிர்தராஜனின் நினைவேந்தல் நேற்று கிழக்கில் அனுஷ்டிப்பு

ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தில் நடைபெற்றது.



முன்னதாக இந்நிகழ்வு திருகோணமலையில் அனுஷ்டிக்கப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோதும் கொவிட் - 19 நிலமை காரணமாக இது மட்டக்களப்புக்கு மாற்றப்பட்டு நடைபெற்றது.



கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்துடன் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ் ஊடக அமையம் மற்றும் தெற்கு ஊடக அமைப்புக்களுடன் இணைந்து கிழக்கு ஊடக ஒன்றியத்தின் தலைவர் எல்.தேவஅதிரன் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது.



சுகாதார விதி முறைகளிற்கு ஏற்றாற்போல் இடம்பெற்ற குறித்த இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான், மற்றும் ஏனைய மக்கள் பிரதிநிதிகள், பொது அமைப்பு;களின் உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், சமூக நலன் விரும்பிகள், எனப் பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.



இதன்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் திருவுருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி நினைவுச் சுடர் ஏற்றி மௌன அஞ்சலியும் இடம்பெற்றன.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct13

இலங்கையை அண்மித்த பகுதிகளில் குறைந்த வளிமண்டலத் தாழ்

Feb01

வவுனியா- செட்டிகுளம் நகர்பகுதியில் இடம்பெற்ற விபத்தி

Feb02

தமிழர்கள் தீர்வுக்காகவும் நீதிக்காகவும் ஜனநாயக வழிய

Mar19

கொழும்பில் எரிபொருள் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத

Feb04

இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் இருந்தே தேர்த ல்

Oct05

நாட்டில் முதலீடு செய்யும் 14 வேலைத்திட்டங்களுக்கு வரி

Sep23

யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரை பகுதிய

Oct07

வடபகுதி  மீனவ சமூகங்களிடையே அட்டைப் பண்ணை என்ற போர்வ

Jan25

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி கள் தவ

May17

யாழ்ப்பாணம் - கொக்குவில் புகைரத நிலையத்திற்கு அருகில்

Aug18

நாட்டை முடக்குவது குறித்து நடுநிலை கொள்கையின் அடிப்ப

Feb08

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம

May23

வவுனியா புளியங்குளம் பகுதியில் காயமடைந்த நிலையில் 

Mar02

வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியில் இன்று (02) காலை மருமக

Oct07

148 ஆவது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு யாழ் பிரதான அஞ்சல