இந்தியாவில் 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு நிரந்தமாக தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Tiktok ,Baidu, WeChat, Mi Video Call, SHAREit, Likee, Weibo மற்றும் BIGO Live உள்ளிட்ட செயலிகள் இதில் அடங்கும்.
இதற்கு முன்னர் மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 267 சீன செயலிகள் மீது நடவடிக்கை எடுத்திருந்தது. இந்நிலையில் அதில் தற்போது 59 சீன செயலிகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவும், பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் ஒலிபரப்புத்துறை தெரிவித்துள்ளது.