நெதர்லாந்தில் கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக நீடிக்கப்பட்ட முடக்க நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் (Amsterdam)கூடிய மக்கள், முடக்க நிலையை நீக்குமாறு வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் போது போராட்டக்காரர்கள் கல்வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டதால், கூட்டத்தை கலைக்க தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.
இரண்டாம் உலகப்போருக்கு பின், நெதர்லாந்தில் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள்,ஊரடங்கைத் தளர்த்த வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.