கொழும்பு மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அருகிலுள்ள பாடசாலைகளில் இணைந்து கற்றல் மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடு வதற்கான வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுத்துள்ள தாகக் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதோடு மாவட்டங் களுக்கும் மாகாணங்களுக்கும் இடையிலான போக்கு வரத்தைக் குறைக்கக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் களிடம் கல்வி அமைச்சு கேட்டுக்கொள்கிறது.
அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் அருகில் அமைந் துள்ள பாடசாலைக்குச் சென்று தற்காலிகக் கல்வியைப் பெறுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, வலயக் கல்வி அலுவலகத்தின் அனுமதியுடன் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.