More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • பிக் பேஷ்: ஸெக் எவண்ஸின் சிறப்பான பந்துவீச்சால் ரெனிகேட்ஸ் அணி வெற்றி!
பிக் பேஷ்: ஸெக் எவண்ஸின் சிறப்பான பந்துவீச்சால் ரெனிகேட்ஸ் அணி வெற்றி!
Jan 26
பிக் பேஷ்: ஸெக் எவண்ஸின் சிறப்பான பந்துவீச்சால் ரெனிகேட்ஸ் அணி வெற்றி!

பிக் பேஷ் ரி-20 தொடரின் 55ஆவது லீக் போட்டியில், மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி 11 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.



மெல்பேர்ன் மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணியும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியும் மோதின.



இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.



இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வெப்ஸ்டர் ஆட்டமிழக்காது 54 ஓட்டங்களையும் மெக்கென்ஸி ஹார்வி 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.



ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் பந்துவீச்சில், லிலே மெரிடித் 3 விக்கெட்டுகளையும் போலண்ட் மற்றும் ஆர் ஸி ஷோர்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.



இதனைத்தொடர்ந்து 151 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் அந்த அணி 11 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.



இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டாவிட் மாலன் 34 ஓட்டங்களையும் ஆர் ஸி ஷோர்ட் 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.



மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணியின் பந்துவீச்சில், ஸெக் எவண்ஸ் 5 விக்கெட்டுகளையும் வில் சுத்தர்லேண்ட், பீட்டர் மற்றும் இமாட் வசிம் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.



இப்போட்டியின் ஆட்டநாயகனாக 4 ஓவர்கள் வீசி 33 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்து வெற்றிக்கு வித்திட்ட ஸெக் எவண்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul30

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் நேற்று இர

Feb12

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில்,

Mar08

மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீ

Jan19

கொரோனா பரவலால் கடந்த ஆண்டு பெரும்பாலான பேட்மிண்டன் போ

Sep26

சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக

Aug20

லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ட

Jan17

இந்திய அணியுடனான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின்

Aug07

ஆஸ்திரேலியா அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்த

Mar15

இந்தியா மற்றும் இலங்கைக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி ப

Jan21

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட

Feb10

அந்த வகையில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, மீண்டும் தங

Jul18

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 5 போட்டிக

Feb13

15-வது இந்திய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின

Jul07

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி வி

Jan21

சிட்டா டெல் ட்ரிகோலர் விளையாட்டரங்கில் உள்ளூர் நேரப்