இலங்கையில் இதுவரை 16 இலட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று (திங்கட்கிழமை) மாத்திரம் நாட்டில் தொற்று நோயாளர்களை அடையாளம் கண்டுகொள்ள 16 ஆயிரத்து 431 பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பிரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 16 இலட்சத்து 25 ஆயிரத்து 46 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் அதிகளவில் அதாவது கடந்த 21 ஆம் திகதி மாத்திரம் 19 ஆயிரத்து 285 பி.சி.ஆர். பிரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.