More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இராணுவமயமாக்கலை நோக்கி நாடு செல்கிறது – தலதா அத்துகோரல!
இராணுவமயமாக்கலை நோக்கி நாடு செல்கிறது – தலதா அத்துகோரல!
Jan 26
இராணுவமயமாக்கலை நோக்கி நாடு செல்கிறது – தலதா அத்துகோரல!

யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.



எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், குறிப்பாக உள்துறை அமைச்சு நேரடியாக பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ளமையை சுட்டிக்காட்டினார்.



அத்தோடு கிராம சேவகர் முதல் மாவட்ட செயலாளர்கள் வரையிலான அதிகாரிகள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வருவது இதுவே முதல் முறை என்றும் 25 மாவட்டங்களுக்கும் பாதுகாப்பை மேற்பார்வையிட இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளமையும் அவர் சுட்டிக்காட்டினார்.



மேலும் எதிர்காலத்தில் இராணுவ அதிகாரிகள் கிராம சேவகர் பிரிவுகளுக்கும் அமைச்சின் செயலாளர்களாகவும் நியமிக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளன என்றும் தலதா அத்துகோரல குறிப்பிட்டுள்ளார்.



இதேவேளை கொரோனா தொற்றினால் 1.1 மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகளும் 20 ஆயிரம் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ள உக்ரேனில் இருந்து சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்குள் அனுமதிப்பது குறித்தும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



அவர்களுக்கு அனுமதி வழங்குவதற்கு முன்னர் நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் தலதா அத்துகோரல அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.



நிதி பற்றாக்குறையால் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்த நடவடிக்கையினால் தங்கள் சொந்த பாரம்பரிய இடங்களை பார்வையிட நாட்டு மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb11

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேலை நாட்கள் குறைக்

May13

வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவில் 2 கொரோனா தொற்றாளர

Mar24

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா கட்டணம் தொடர்பி

Feb23

கடல் ஆய்வில் ஈடுபட்டு வரும் அமெரிக்க பிரஜையின் உடைமைக

Feb09

இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் வன்முறையை துாண்டும் வ

Apr01

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணியாளர்களாக செல

Jun23

பாரிய கொரோனா நோய்த் தொற்று நிலைமைக்கு மத்தியில் எரிபொ

Jun11

விக்டோரியா மற்றும் ரந்தெனிகல நீர்த்தேக்கங்களில் இரு

Mar16

கடந்த காலத்தில் டீசல் பயன்பாடு 54%, பெட்ரோல் பயன்பாடு 35% ம

Apr02

இலங்கை மக்களிற்கு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உ

Sep30

மாலைத்தீவின் சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியர் ஷா ம

May18

ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 35 ரூபாயினால் அதிகரிக்க ந

Jun13

இலங்கையில் மேலும் இரு வாரங்களுக்கு முழுநேரப் பயணக் கட

Apr08

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பேச

Sep20

நாடளாவிய ரீதியில் இன்று (20) செவ்வாய்க்கிழமை ஒரு மணித்த