More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • சொந்த மண்ணில் தோற்கடிப்பதா? மே.தீவுகளை வயிட் வோஷ் செய்தது பங்களாதேஷ்!
சொந்த மண்ணில் தோற்கடிப்பதா? மே.தீவுகளை வயிட் வோஷ் செய்தது பங்களாதேஷ்!
Jan 26
சொந்த மண்ணில் தோற்கடிப்பதா? மே.தீவுகளை வயிட் வோஷ் செய்தது பங்களாதேஷ்!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், பங்களாதேஷ் அணி 120 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.



இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பங்களாதேஷ் அணி, முழுமையாக கைப்பற்றி மேற்கிந்திய தீவுகள் அணியை வயிட் வோஷ் செய்தது.



சட்டோகிராம் மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.



இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 297 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.



இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டமீம் இக்பால், ரஹீம் மற்றும் மொஹமதுல்லா ஆகியோர் தலா 64 ஓட்டங்களையும் சகிப் ஹல் ஹசன் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.



மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், அல்சார்ரி ஜோசப் மற்றும் ரெய்பர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மேயர்ஸ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.



இதனைத்தொடர்ந்து 298 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 44.2 ஓவர்கள் நிறைவில் 177 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் பங்களாதேஷ் அணி 120 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.



இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரொவ்மன் பவல் 47 ஓட்டங்களையும் போனர் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.



பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், மொஹமட் சய்பூதின் 3 விக்கெட்டுகளையும் முஷ்டபிசுர் ரஹ்மான் மற்றும் மெயிடி ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் டஸ்கின் அஹமட் மற்றும் சௌமியா சர்கார் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.



இப்போட்டியின் ஆட்டநாயகனாக முஷ்பிகுர் ரஹீம் தெரிவுசெய்யப்பட்டதோடு, சகிப் ஹல் ஹசன் தொடரின் நாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar05

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. மாதம்தோறும் சிற

Sep20

இந்தியா மற்றும் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணிகளுக்கிட

Sep04

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்

Aug31

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நேற்று தொடங்கியது. இதில

Aug18

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்

Oct01

வீதி பாதுகாப்பு உலகத் ரி-20 தொடரின் இரண்டாவது அரையிறுதி

Aug04

32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில

Oct03

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில

Jul06

கோவாவில் உள்ள காசா டிடோ கிளப் மிகவும் பிரபலமானது. அங்க

Mar14

அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் குறைந்த பந்துகளில் அரை சதம

Apr15

ஐ.பி.எல். ரி-20 தொடரின் ஆறாவது லீக் போட்டியில், றோயல் செலஞ

Oct15

மகளிருக்கான ஆசியக் கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரின், சம்ப

Oct18

உலக கிண்ண இருபதுக்கு இருபது தொடரில் இன்றைய தினம் ஐந்த

Oct25

சுவிஸ் உள்ளரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர

Feb16

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அண்மையி